கழகத்தின் மைதானத்தை அமைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி அளப்பரிய சேவையை ஆற்றியது – சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டுக் கழகத் தலைவர்…!

மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது விளையாட்டு கழகத்தின் மைதானத்தை அமைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி அளப்பரிய சேவையை ஆற்றியது என சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் ஜெ.குறிஞ்சிக்குமரன் தெரிவித்தார்.
சென்.பிலிப்நேரிஸ் வெற்றிக்கிண்ணம் 2016 இற்கான மாபெரும் விளையாட்டுப் போட்டி செம்பியன்பற்று வடக்கு சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரைற்றும் போதுமேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது கழகத்திற்கான மைதானம் அமைப்பதில் எவ்விதமான வசதிகளும் இருக்கவில்லை. இவ்விடம் மணல் பாங்கான இடம். அதன்போது எமது கிராம புலன்பெயர் உறவுகள் உதவிகளை மேற்கொள்ள ஆரம்பித்தன. மைதானத்திற்கு களிமண் பரவி மைதானத்தைப் புனரமைக்க ஜேசிபி கனரக வாகன உதவிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் டிசிபி நிதி உதவிகளையும் விசேட நிதி உதவிகளையும் தந்து உதவினார்கள். மேலும் விளையாட்டு உபகரணங்களையும் தந்து உதவினார்கள். இன்று பூரணமான இம்மைதானத்தில் வெற்றிக்கிண்ணம் போட்டிகளை நடாத்துகின்றோம் எனத் தெரிவித்தார்.
2016 இற்கான சென்.பிலிப்நேரிஸ் வெற்றிக் கிண்ணத்ததை உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் 02 கோல்களை அடித்துக் கைப்பற்றிக் கொண்டது. கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையாட்டுக்கழகம் ஒரு கோல்களை மட்டுமே அடித்திருந்தது.
இம் விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி பிரதேச செயலர் திரு க.கனகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி நிர்வாக செயலாளரும பருத்தித்துறை பிரதேசசபை முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை ஜே.எல்மோ அருள்நேசன், உதவிப் பங்குத் தந்தை அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அடிகளார் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மருதங்கேணி விளையாட்டு உத்தியோகத்தர் திரு சி.ஜிவிந்தன், கிராம அலுவலர் திருமதி க.ராதிகா, சமுர்த்தி உத்தியோகத்தர் திரு யோ.மரியறெஜினோல்ட் ராசகுமார், வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் திரு என்.நிமல்ராஜ் மற்றும் சென்.பிலிப்நேரிஸ் புலம்பெயர் ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
|
|