கள் உற்பத்தி அதிகரித்தும் விற்பனை பெரும் வீழ்ச்சி – பியரும் தாக்கம் செலுத்துகின்றதென கூறுகிறது பனை தென்னைவளச்சங்கம்!

Thursday, May 31st, 2018

யாழ்பாணமாவட்டத்தில் தற்போது கள் உற்பத்திப்பருவகாலம் ஆரம்பித்தாலும் கூட அதன் விற்பனை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் எஞ்சும் கள்ளை வடிசாராய நிலையங்களுககு வளங்க வேண்டியுள்ளது. பியர் உற்பத்தியும் இதில் தாக்கம் செலுத்துகிறது.

என யாழ்ப்பாண மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தலைவர் எஸ்.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

கள் விற்பனை வீழ்ச்சியடைந்தால் தொழிலாளர்கள் மற்றும் மற்றும் அங்கத்தவர்களின் வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்படும். தற்போது கள் பருவகாலம் ஆரம்பித்துள்ளது.

பனை தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் கள் உற்பத்தி அதிகரித்தள்ளது. ஆனால்; அதிகளவில் பெறப்படும் கள்ளைப் போதிய அளவு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விற்ப்பனை இன்றித் தேங்கும் கள் கொத்தணி வடிசாராய நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு வரகின்றன்றன. அதனை விட போத்தலில் கள் அடைக்கும் திட்டத்துக்கும் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தினமும் விற்பனை இன்றி போதிய அளவு கள் தேங்கும் நிலைக்குத்தாம் தள்ளப்பட்டுள்ளதாக சங்க உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக பியர் ரின்களின் விலை குறைவடைந்த அதன் பாவனைகள் அதிகரித்துள்ளதால் தான் நுகர்வு குறைய ஒரு காரணம் என்று நாம் கருதுகிறோம் என்று தெரிவித்தார்.

Related posts: