களை நாசினியான கிளிபோசேட் இறக்குமதிக்குத் தடை விதிப்பு!

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதான களை நாசினி கிளிபோசேட்டினை இலங்கைக்குள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாட்டின் வெவ்வேறு பாகங்களில் கொடிய சிறுநீரக நோய்த் தொற்று ஏற்படுவதற்கு கிளிபோசேட் பாவனை காரணமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவற்றை இறக்குமதி செய்வது தொடர்பிலான தடை உத்தரவு ஜனாதிபதியினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந் நிலையில், பெருந்தோட்ட உரிமையாளர்கள் கிளிபோசேட் இறக்குமதியை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பிரதானமாக தேயிலை பெருந்தோட்டங்களில் களைகளை அகற்றுவது மிகவும் செலவினம் நிறைந்த செயற்பாடாக அமைந்துள்ளமையால் களைநாசினியான கிளிபோசேட் இறக்குமதிக்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பா உள்ளடங்கலான பெருமளவான நாடுகளில் கிளிபோசேட் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலே இலங்கையிலும் இந்தநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Related posts:
|
|