களைகட்டியுள்ள நோன்புப் பெருநாள் !

Monday, June 26th, 2017

நாடு முழுவதிலும் வாழும் முஸ்லிம் மக்கள் ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

கொழும்பு வடக்கு கிழக்கு மலையகம் என சகல பகுதிகளிலும் மக்கள் இன்று காலை முதலே மக்கள் விசேட பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதுடன் உற்றார் உறவினர்களுடன் இணைந்து நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

தென் பகுதியில் குறிப்பாக கொழும்பில் பிரதான பெருநாள் தொழுகை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றதோடு ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

வடக்கில் யாழ். ஒஸ்மானிய கல்லூரி மைதானத்தில் வடக்கு ஆளுநர் ரெஜனோல்ட் குரே மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் விசேட நோன்புப் பெருநாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் அன்பர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts: