களுபோவில வைத்தியசாலை பிரேத அறையிலுள்ள 37 சடலங்களில் 20 சடலங்கள் கொவிட் அல்லாதவை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன சுட்டிக்காட்டு!

Monday, August 9th, 2021

களுபோவில வைத்தியசாலை பிரேத அறையிலுள்ள 37 சடலங்களில் 20  உடல்கள் கொவிட் அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

நேற்று மருத்துவமனையின் நிலைமை தொடர்பாக ஆராயச் சென்ற அமைச்சர், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் மருத்துவமனையை அடையமுடியாமலும், தொற்று நோய்க்கு மத்தியில் உடல்களைக் கோருவதற்கான முழுமையான ஆவணங்கள் காரணமாகவும் சடலங்கள் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளால் மருத்துவமனை நெரிசல் அடைவது குறித்து வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. அது இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே நடந்தது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மேலும் இரண்டு வார்ட்களை ஏற்பாடு செய்தோம். இப்போது பிரச்சினை முடிந்துவிட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: