களவாகப் பனை தறித்தால் இனி சிறை – அபிவிருத்திச் சபை எச்சரிக்கை!

சட்டத்துக்குப் புறம்பாகப் பனைமரங்களைத் தறிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பொதுமக்களுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்திச் சபை எச்சரித்துள்ளது.
அதனையும் மீறி பனை தறித்தாலோ அல்லது அதற்கு உடந்தையாக இருந்தாலோ எவராக இருந்தாலும் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும் கூறியுள்ளது. அவர்களுக்குத் தண்டம் விதிக்கப்படுவது மட்டுமன்றி சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் சபை எச்சரித்துள்ளது.
சட்ட விரோத பனை தறித்தல் தொடர்பான முறைப்பாடுகளை 021 222 2034 என்ற இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என்றும் சபை மேலும் தெரிவித்தது.
Related posts:
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் - இந்திய இராணுவத்திரரிடையே கடும் மோதல்!
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்ககள் பொலிஸாரால் கைது!
போதுமான அளவு நீரில்லை: மின்சார தடையை அமுல்படுத்த முயற்சி?
|
|