களனி பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு மாணவர்களுக்கு அவசர உத்தரவு!

களனி பல்கலைக்கழகம் மற்றும் யக்கலையில் உள்ள கம்பஹா விக்ரம ஆராச்சி ஆயுர்வேத நிறுவனம் ஆகியவை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படும்.
மேலும், மாணவர்கள் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பிற பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் வழக்கம் போல் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் பேராசிரியர் கூறினார்
இதேவேளை மினுவாங்கொட மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 9ஆம் திகதி வழங்கப்பட இருந்த 2ஆம் தவணைக்கான பாடசாலை விடுமுறையும் நாளை முதல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|