கல்வி விவகாரங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் இரண்டு வடபகுதி தமிழர்கள்!

இலங்கையின் கல்வி விவகாரங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் இரண்டு வடபகுதி தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்..
குறித்த ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் தமிழ் உறுப்பினர்களாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனும் கிளிநெச்சி கல்வி வலய ஆங்கில பாட கல்வி உதவிப்பணிப்பாளரான .என் சுதர்சனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையின் ஆரம்ப மற்றும் இரண்டாம், மூன்றாம் கல்வி துறைகளை காலத்தின் தேவைக்கேற்ப உகந்தவாறு நவீனமயமாக்குவது அவசியமென இனங்காணப்பட்டுள்ளதாலும் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரைணமாக கல்வித்துறைக்கு எந்தவித்திலும் தடையேற்படாதவாறும் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்லும் திறன் முறைகளை காலத்திற்கு காலம் வகுத்து கல்வியை அபவிருத்தி செய்யும் நோக்கில் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் 29 பேர் அங்கத்துவம் வகிக்கின்ற நிலையில் இவ் இருவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|