கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்விபொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நீரில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் கையூட்டல் பெறப்பட்டனவா? விசாரணை நடத்துமாறு நிதி மோசடிப் பிரிவுக்க...
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சிறுநீரகங்களை கொண்டு மாற்று அறுவை சிகிச்சை - சுகாதார அமைச்சர் !
“நீர்வழி தயார் நிலை ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” – திருமலையில் இலங்கை, அமெ...
|
|