கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு அனுப்பிவைப்பு – விசேட போக்குவரத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, நாளையதினம்முதல் நாடளாவிய ரீதியில் 1,617 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், 16 புதிய தொடரூந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
12 மலைநாட்டு தொடருந்துகளும், 4 கரையோர தொடருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சைக்கான வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
2 ஆயிரத்து 200 பரீட்சை நிலையங்களில் கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சை இடம்பெறவுள்ளன.
3 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிக பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
நேற்றிரவு முதல் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு வினாப்பத்திரங்களை அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
அதேநேரம் பரீட்சை காரணமாக தொடர்ந்து மின்சாரத்தை விநியோகிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
பரீட்சை நேரத்திலும், இரவு வேளையில் மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|