கல்வி நிலையில் தொடர்ந்தும் வடக்கு மாகாணம் 9 ஆவது இடத்தில் : 623 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்சியடையவில்லை – புத்திஜீவிகள் கவலை!

Sunday, April 8th, 2018

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்நிலையில் வடக்கு மாகாணம் இம்முறையும் 9 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வியியலாளர்கள் கடும் அதிர்ப்பதியை வெளியிட்டுள்ளனர்.

வெளியாகியிருந்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டம் 12 ஆவது இடத்திலும் வவுனியா மாவட்டம் 18 ஆவது இடத்திலும் யாழ்ப்பாணம் மாவட்ம் 19 அவது இடத்திலும் முல்லைத்தீவு மாவட்டம் 24 ஆவது இடத்திலும் கிளிநொச்சி மாவட்டம் 25 ஆவது இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

அது மாத்திரமன்றி பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 623 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகின்றது.

2016 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 10562 பேர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றிருந்தனர். இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 60.66 சதவீதமாகும். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 11901 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்கு தோற்றியோரில் 66.12 சதவீதமாகும்.

2016 ஆம் ஆண்டு தேசியரீதியில் வடக்கு மாகாணம் 9 ஆவது மாகாணமாக இருந்துள்ள அதேவேளை 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாதரண தர பரீட்சைகளின் அடிப்படையிலும் வடக்கு மாகாணம் தொடர்ந்தும் 98 ஆவது இடத்திலேயே உள்ளது. இதனிடையே கிழக்கு மாகாணம் 8 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையின் வீழ்ச்சிக்கு வடக்கு மாகாணசபையின் திறனற்ற செயற்பாடுகளே முக்கிய காரணம் என கல்விமான்கள் உள்ளிட்ட கல்விப்புலம் சார்ந்தோர் தமது ஆதங்கத்தை கவலையுடன் வெளியிட்டுள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற காலப்ப குதியிலும் சரி யுத்தம் நிறைவுக்கு வந்து 2015 ஆண்டு வரையான கலப்பகுதியிலும் சரி கல்வியில் வடக்கு மாகாணம் பாரிய முன்னேற்றம் அடைந்திருந்த நிலையில் 2016, 2017 ஆம் ஆண்டு பெறுபெறுகள் மிகுந்த ஏமாற்றத்தை தருவதாகவும் கல்லியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த அரசில் அமைச்சராக இருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெரும் முயற்சியின் பயனாக வடக்கு மாகாணம் கல்வி நிலையில் முன்னேற்றம் அடைந்திருந்ததாகவும் அதன் பின்னரான காலப்பகுதியிலேயே வடக்கு மாணவர்களின் கல்வி நிலையில் பாரிய விழ்ச்சி ஏற்பட்டு வடக்கு மாகாணம் 9 ஆவது இடமாக பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் கல்விமான்கள் புத்திஜீவிகள் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: