கல்வி நிர்வாக சேவை சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Monday, July 23rd, 2018

அரசியல் பழிவாங்கல்களில் கல்வித்துறை இலக்காவதாகவும் அரசியல் இலாப நோக்கில் வழங்கப்படவுள்ள 1018 நியமனங்களையும் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்களை நிறுத்தாவிடின் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலகப் போவதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சங்கம் என்பன எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும் தமது கோரிக்கைகளை ஏற்காவிடின் எதிர்வரும் 26 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: