கல்வி நிருவாகசேவைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியது – 812பேர் சித்தி!

இலங்கை கல்வி நிருவாகசேவையின் தரம் 3இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
கல்வியமைச்சின் இணையத்தளத்தில் இன்று சித்தி பெற்றவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இப்பரீட்சை கடந்த 10.07.2016இல் கொழும்பில் நடாத்தப்பட்டது. விசேட மற்றும் பொது பாடத்துறைகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவிருக்கிறது.
சித்திபெற்ற 812பேருக்கும் வாய்மொழிப்பரீட்சை கொழும்பில் நடைபெறவிருக்கிறது. அதில் தெரிவாவோர் இ.க.நி.சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவர். சித்திபெற்ற 812 பேரின் பெயர், விபரம், சுட்டிலக்கம், அடையாள அட்டை இலக்கம், விலாசம், மொழிமூலம் போன்ற பூரண விளக்கத்துடன் பதிவேற்றம் இடம்பெற்றுள்ளது.
கல்வியமைச்சின் இணையத்தளத்தின் சிங்களப்பக்கத்தில் மாத்திரம் முதலில் பதிவேற்றம் இடம்பெற்றுள்ளது. தமிழ்ப்பக்கத்தில் பார்த்தோர் ஏமாற்றமடைந்தனர்.
Related posts:
|
|