கல்வி செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி விசேட செயலணி!
Wednesday, April 1st, 2020நாட்டின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் தேடிபார்ப்பதற்காக ஜனாதிபதி விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட செயலணி அமைக்கப்பட்டுள்ளதுன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்திருந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் கல்வித்துறை செயற்பாடுகளை வீழ்ச்சியாது பாதுகாக்கும் நோக்கில் இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டின் ஆரம்ப கல்வி, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை கல்வித் துறைகளின் செயற்பாடுகளை இந்த செயற்குழு முறையாக மேம்படுத்தப்பட உள்ளது.
இதற்கு உயர்கல்வி, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு அபிவிருத்தி தொழில் மற்றும் தொழிலாளர்கள் சம்பந்தமான அமைச்சின் செயலாளர் டி.எம்.ஏ.ஆர்.பி திசாநாயக்க தலைமையிலான 26 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் வித்ரானந்த, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் டி.எம்.எம்.அபேகுணவர்தன மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.கீர்த்திரத்ன, விசாக்கா வித்யாலய அதிபர் சந்தமாலி அவிருப்போல மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் குழு உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
|
|