கல்வி கற்கும் ஆண்டுகளை குறைப்பது ஓர் யோசனை மட்டுமே – கல்வி அமைச்சர்

Monday, July 24th, 2017

பாடசாலையில் கல்வி கற்கும் ஆண்டுகளை குறைப்பது ஓர் யோசனை மட்டுமேயாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் கல்வி கற்கும் ஆண்டுகளின் எண்ணிக்கையை 13ல் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டுமென தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10லும், உயர்தரப் பரீட்சையை தரம் 12லும் நடத்துவதற்கு யோசனை முன்வைத்திருந்தது.எனினும், இந்த பரிந்துரையானது வெறும் யோசனைத் திட்டம் மட்டுமே என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: