கல்வி கட்டமைப்பில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விசேட நிவாரணங்களை வழங்கும் வகையில் அடையாள அட்டை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 1st, 2020

கல்வி கட்டமைப்பில் சேவையாற்றும் அனைத்து ஊழியர் களுக்கும் தேசிய மட்டத்திலான தொழில் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும ஏற்கனவே, கல்வியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த அடையாள அட்டைகள், இலங்கையின் கல்வித்துறையில் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர் பயிற்சியாளர்கள், ஆசிரியர் ஆலோசக அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

நவீன தொழிநுட்பத்துடன் வடிவமைக்கப்படும் இந்த அடையாள அட்டைகளின் மூலம் கல்வித்துறையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு விசேடமான பல நிவாரண சேவைகள் கிடைக்கும் என கல்வியமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: