கல்வி உதவிகளைப் பெறும் மாணவர்கள் அதைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்!

கல்வி உதவிகளைப் பெறும் மாணவர்கள் அதை வழங்குவோரின் மனதைக் குளிரச் செய்யும் அளவுக்கு சிறந்து செயற்படவேண்டும் என்று தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் தெரிவித்துள்ளார்.
கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தர வகுப்பில் இணைந்த பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கு முன்னர் நிதி வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட நிதியின் மூலம் உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களிலும் அதிசிறப்பு சித்தி பெற்றால் பல்கலைக்கழகத்தின் கல்வி முடியும் வரை ஊக்குவிப்பு நிதி வழங்கப்படும். அவ்விதம் இன்று கல்வி ஊக்குவிப்பு நிதி பெறும் மாணவர்கள் அதிசிறப்பு சித்தி பெற்றால் உயர்கல்விக்கான செலவும் பொறுப்பேற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
51 பெண்கள் குவைத்தில் இருந்து நாடு திரும்பினர்!
இலங்கைக்கு இந்தியாவின் நட்புறவிலான உதவிகள்!
அர்ஜுன் மகேந்திரன் விவகாரம்: ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து!
|
|