கல்வி அமைச்சு கோரிக்கை – 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியியை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில், சுகாதாரத்துறையின் விசேட நிபுணர்களுடன் இணைந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, ஜப்பானால் நன்கொடையளிக்கப்படவுள்ள 14 இலட்சத்து 70 ஆயிரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் அடுத்தவாரமளவில் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
இரண்டே மாதங்களில் இலக்கை எட்டிய இலங்கை!
மே 11 இல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு!
உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும் - ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை!
|
|