கல்வி அமைச்சு அதிரடி:  தமிழ் , சிங்கள மொழி மூல ஆசிரியரக்கு வாய்ப்பு!

Monday, May 28th, 2018

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப, பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பட்டதாரிகளை தொழில் வாய்ப்புக்களில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, அபிவிருத்தி உதவியாளர், திட்டமிடல், நிதி முகாமையாளர் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற்று கல்வி அமைச்சிலும், திணைக்களங்கள், தேசிய பாடசாலைகள், கல்வியல் கல்லூரிகளிலும் பணியாற்றும் பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

தேசிய பாடசாலைகளில் நிலவி வரும் வெற்றிடங்களுக்கு இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts: