கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி – போராட்டம் தொடருமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021

கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

எனவே, தற்போது நடைபெற்று வரும் ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாட்டை தொடர்ந்தும் புறககணிக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளை (22) கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண திங்கள்கிழமை (26) அமைச்சரவையில் ஒரு திட்டத்தை சமர்ப்பிப்பதாக அமைச்சர் உறுதியளித்த போதிலும், நிரந்தர தீர்வு காணப்படும்வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தயாராக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: