கல்வி அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் – வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்!

வடக்கில் கல்வி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கல்விசார் அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என வடமாகாண கல்வி கலாசார அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
சிவன் அறக்கட்டளையின் அதியுயர் மட்ட ஆலோசனைக்குழுவின் கல்வி கலாசார விளையாட்டுத் துறைக்குழுவினர் வடமாகாண கல்வி கலாசார அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர்,
வடமாகாண மக்களின் பொருளாதார கல்வி அபிவிருத்தி தொடர்பில் வடமாகாணத்திலுள்ள உயர் மட்ட கல்வி அதிகாரிகள் பொது நிறுவனம் ஒன்றின் கீழ் ஒன்றிணைந்து மிகுந்த அக்கறையுடன் செயற்பட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
வடமாகாண மக்களுடைய அபிவிருத்தி விடயங்கள் போன்ற திட்டங்கள் ஆலோசனைகளை முன்மொழிந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி சார் அதிகாரிகள் தமக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும். அந்த வகையில் எண்ணற்ற வேலைத் திட்டங்களை எம்மால் நடைமுறைப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
Related posts:
|
|