கல்வியில் மறுசீரமைப்பு மிகவும் அவசியம் – ஒத்துழைக்குமாறு பொதுநலவாய அமைப்பிடம் கோரும் ரணில்!

Sunday, May 7th, 2023

இலங்கையின் கல்வித்துறையில் மறுசீரமைப்பு மிகவும் அவசியமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கு  பொதுநலவாய அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் ஆகியோர் பொதுநலவாய நாடுகள் அமைப்பின், தலைவர்கள் மாநாட்டில் கடந்தவார  இறுதியில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இளையோரின் பங்கேற்பு மற்றும் கல்வி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பொதுநலவாய அமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை கானா நாட்டின் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த நிகழ்வுக்கு இணையாக நடைபெற்ற   ‘Fireside Chat’ நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி நடத்தப்படும் - பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் தெர...
இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு - இறுதியில் இலங்கைவந்தடையும் எனவும் எதி...
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும்? - அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் ...