கல்வித்துறைக்கு தென்கொரியா உதவி!

Monday, July 25th, 2016

இலங்கையின் கல்வித்திட்டத்துக்குள், ஸ்மாட் வகுப்பறைகள், இலத்திரனியல் பாடநூல் மற்றும் இலத்திரனியல் கற்றல் போன்ற நவீன கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தென் கொரிய அரசாங்கம், இலங்கையிலுள்ள ஆசிரியர்களுக்கான வருடாந்த ஆசியரியர் பயிற்சி திட்டத்தை தொடர்ந்தும் நடத்தும் என்றும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு தென்கொரியாவுக்குச் சென்றிருந்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், குவாங்ஜூ நகரிலுள்ள கல்வித்திணைக்களத்தின் கண்காணிப்பாளரை சந்தித்த போதே, இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு, தென்கொரியா உதவும்’  என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கல்வித்திட்டத்தை மென்மேலும் அபிவிருத்திய அடையச்செய்வதற்கு தென்கொரிய அரசாங்கம் தன்னுடைய முழு ஆதரவை எப்போதும் வழங்கும்’ என்று தென்கொரியாவின் துணை பிரதமரும் கல்வியமைச்சருமான லீ ஜூன் சிக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

கொழும்பில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் விமானங்கள் மூன்று மாதங்களுக்கு இரத்த...
ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் யுகம் இதற்...
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது சொத்து பிரகடனத்தை தொழில் அ...