கல்விசார ஊழியர்களின் பணி்ப்பகிஷ்கரிப்பு வலுவடையும் !

Monday, August 1st, 2016

தங்களின் பணி்ப்பகிஷ்கரிப்பை மேலும் கடுமையாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார். ஏழு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தங்களின் கோரிக்கைளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காததன் காரணமாக தொடந்தும் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: