கலை இலக்கிய படைப்புக்கள் உயிர்ப்புடன் செயற்பட உதவுங்கள் – ஈ.பி.டி.பியிடம் கலைஞர்கள் கோரிக்கை!

Sunday, February 5th, 2017

கலை வடிக்கும் கலைஞர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை அகற்றி அதனூடாக  எமது இனத்தின் பாரம்பரிய வரலாறுகளையும் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குரிய பொக்கிசங்களாக நகர்த்திச் செல்வதற்கான களமாக  தமிழ் மக்கள் கலை பண்பாட்டுப் பேரவை என்னும்  அமைபை  உருவாக்கவேண்டும் என யாழ் மாவட்ட கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில்  தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட கலைஞர்கள் தமது படைப்பாற்றல்களை வெளிக்கொணர்வதற்கு சமூகத்தில் தாம் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையிவல் –

எமது பிரதேசத்தில் பல்வேறுபட்ட துறைகளில் துறைசார் கலைஞர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் அதிகமானவர்கள் வறுமையானவர்களாகவும் தமது படைப்புக்களை வெளிக்கொணருவதற்காக களம் கிடைக்காதவர்களுமாகவே உள்ளனர்.

image-0-02-03-7853578163c188deb318a14d7be05890f52ac70979d021d236a1579eeece60fd-V

மேலும் தென்னிந்திய படைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  எமது பிரதேச மக்களும் அதனை விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகங்களும் எமது பாரம்பரிய கலைப்படைப்புகளுக்கும் அதற்கு உயிர் கொடுக்கும் எமது பிரதேச கவைலஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

வெளிநாடுகளில் எமது கலைஞர்களுக்கு கிடைக்கும் வரவேற்புகள் கூட யாழ்ப்பாணத்தில் எமது கலைஞர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அத்துடன் திறமைகளுக்கான கௌரவிப்புகளும் கிடைப்பதில்லை.

image-0-02-03-b1a35e81671241cef9693261a9587a48b323300ac3286cc0ef18bdbeb2d56a55-V

இவ்வாறான ஒரு நிலைமைகளால் தான் எமது பாரம்பரியங்களும் கலை கலாசாரங்களும் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படாது மௌனிக்கும் நிலைக்ககு சென்றுகொண்டிருக்கின்றது என சுட்டிக்காட்டினர்.

இந்த ஒன்றுகூடலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: