கலைமகள் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கணனி அன்பளிப்பு!

Wednesday, April 20th, 2016
யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கணனி உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தமது சனசமூக நிலையத்தின் தேவைக்காக கணனி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த கோரிக்கையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு இரவீந்திரதாசன் கொண்டு சென்றதன்பயனாக, இன்றைய தினம் (20) அவர்களுக்கான கணனியை கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் வைத்து கட்சியின் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் வசந்தன் மற்றும் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ஆகியோரால் நிலைய நிர்வாகத்தினரிடம்; கையளிக்கப்பட்டது.
2 (4)

Related posts: