கலைப்பீட கற்றல் நடவடிக்கைகளை மீள் ஆரம்பிக்குமாறு மாணவர் ஒன்றியம் கோரிக்கை!

Wednesday, March 15th, 2017

மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ள  கலைப்பீட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் நிர்வாகத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய முறையில் விசாரணை நடத்த மாணவர் ஒன்றியமும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மாணவர்களிடையே விசாரணை மேற்கொண்டால் அதனை மாணவர் நலன்  கருதி குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளுமாறும், தனிப்பட்ட ரீதியில் மாணவர்களை தண்டிப்பதை விடுக்குமாறும் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

download

Related posts: