கலாச்சார விழுமியங்களை மதிக்கத்தக்கவர்களாக எமது சிறார்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன்!

Monday, October 1st, 2018

எமது கலாச்சார விழுமியங்களை மதிக்கத்தக்கவர்களாக எமது சிறார்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும், தற்கால நிலைமைகளுக்கேற்ப பாரம்பரியங்களை உணர்ந்தவர்களாக எமது சிறார்கள் வளர வேண்டும். வளர்க்கப்படல் வேண்டும். இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் தனது சிறுவர் தின வாழ்த்துக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நாளைய தேசத்துக்கேற்ற தலைவர்களான இன்றைய சிறார்கள் சரியான கட்டுக்கோப்புடன் வளர்க்கப்படுவதற்கான கட்டமைப்புகள் எமது பிரதேசங்களில் உருவாக்கப்படல் வேண்டும், சாதாரணதரம், உயர்தர வகுப்புக்களில் இருந்து இடைவிலகிய மாணவர்களுக்கான தொழில்முறை சார் கல்விசாலைகள் இன்னும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

ரஷ்ய புரட்சியின் பின்னர் கல்வியாலேயே இன்று அந்த தேசம் உயர்ந்து நிற்பதை நாம் உதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். இதற்காக கல்வியியலாளர்கள் முன்மாதிரியான திட்டங்களை சமூகத்திற்கு முன்மொழிய வேண்டும். இதற்காக இந்த சமூகத்திலுள்ள அரசியலாளர்களை கணிசமான அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

இதனூடாக ஒரு நல்ல வளமான மாணவர் சமூகத்தை நாம் பிரசவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ள மாகாணசபை உறுப்பினர் தவநாதன் அவர்கள்

பன்னாட்டு ரீதியாக முன்னெடுக்கப்படும் இன்றைய சிறுவர் தினத்தில் பன்னாட்டு தரத்திற்கு ஈடாக எமது மாணவர்களும் உயர்வு பெற வாழ்த்துவதாகவும் அவர் தனது சிறுவர் தின வாழ்த்துக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts:

அதிபர்கள் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்...

தொடருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையில் 600 படையினர் - தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!
கடந்த காலத்தின் குறைகள் தொடர்பில் விவாதித்துக்கொண்டிராது, நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டு -...
நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு - தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் ...