கலந்துரையாடல் ஊடாக புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாகவே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, June 5th, 2022

கலந்துரையாடல் மேற்கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தி முன்னேறுவதே நாட்டை முன்னோக்கி செல்ல ஒரே வழி என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர், அனைவரையும் ஒன்றிணைத்து இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் பணியாற்றுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பதவியில் இருப்பவர்களை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், பதவி விலகல் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: