கற்றல் நடவடிக்கையின் போது மாணவர்கள் முகக்கவசங்களை அணிவது அவசியமில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

பாடசாலைகள் ஆரம்பித்தபின் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து வருவது கட்டாயப்படுத்தப்படாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பான முக்கிய சந்திப்பு ஒன்று நேற்றையதினம் சுகாதார அமைச்சில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடந்தது. இதன்’போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தீர்மானத்திற்குவரக் காரணம், சந்தையில் பலவித முகக்கவசங்கள் இருப்பதோடு சிறுவர்கள் கூடிய நேரம் அவற்றை அணிந்திருந்தால் சுவாசிக்க சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பதுமட்டுமன்றி வேறு நோய்களும் ஏற்படலாம் என்று டாக்டர் பலிஹவடன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பாடசாலைக்கு வரும் போதும் பாடசாலையில் இருந்து செல்லும் போதும் அவசியம் ஏற்பட்டால் மாத்திரம் முக கவசம் அணிவிக்க பெற்றோர் தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் பாடசாலைகள் ஆரம்பித்த பின்னர் மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|