கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகள் – ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021

கல்வி சேவைகளுக்காக புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும், ஊடகப்பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த திட்டத்தின் கீ்ழ் தரம் 1முதல் 13 வரையான வகுப்புகளுக்காக 13 தொலைக்காட்சி அலைவரிசைகளும், பிரிவெனா கல்விக்காக 2 தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அண்மையில் கண்டி, குண்டசாலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் மாணவர்களினது கல்வியை வீழ்ச்சியடைய செய்யாமல் கவனித்துக்கொள்வது அரசாங்கத்தினது கடமையாகும் எனத் தெரிவித்த அமைச்சர், கல்வி ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றும் எந்த சவால்கள் வந்தாலும் அதனை நிவர்த்திக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: