கற்பகச்சோலை உற்பத்தி தொகுதியை யாழில் திறப்பு!

Wednesday, April 12th, 2017

கற்பகச்சோலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொகுதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழில் திறந்து வைத்துள்ளார்.

பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில், தலைவர் தலைமையில் இன்று காலை யாழ்.ஸ்ரான்லி வீதியில் குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பனை அபிவிருத்திச் சபையின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் குறித்த சந்தைப்படுத்தல் நிலையத்தில், உற்பத்தி செய்யப்படும் உணவுகளையும் பார்வையிட்டதுடன், உற்பத்தி பொருட்களையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, யாழ். மத்திய கல்லூரியில் பனைசார் உற்பத்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கப்பட்டதுடன், “பொறாசஸ்” விஞ்ஞானப் பார்வையில் பனை வளம் எனும் தொனிப்பொருளிலான நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.


கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!
“துறைமுகம் ஒருபோதும் விற்பனை செய்யப்படமாட்டாது”
எரிபொருள் விலை விவகாரம்  –  இறுதி தீர்மானம் இன்று!
அரச மொழித் தினத்தினைப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!
டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தபோதே வடக்கு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்த...