கர்ப்பிணி பெண்கள் 200 பேருக்கு கொவிட் தொற்று – அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!
Sunday, June 27th, 2021கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்ட சுமார் 200 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குழந்தைகளை பிரசவித்த சுமார் 25 தாய்மார்கள் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கர்ப்பிணி பெண்களை அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர்த்து கொள்ளுமாறும் குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நியமனத்தில் பாரபட்சம் - வெளிவாரிப் பட்டதாரிகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு!
கொரோனா தொற்று: மேலும் ஒருவர் இனங்காணப்பட்டடார் !
மேலதிக கொடுப்பனவு தொகையை பெறுவதில்லை என மின்சார சபையின் ஊழியர்கள் தீர்மானம் - பல பில்லியன் ரூபாவை சே...
|
|