கர்ப்பிணி பெண்களை மீண்டும் அரச சேவைக்கு அழைக்க தீர்மானம் – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021

மீண்டும் கர்ப்பிணி பெண்களை அரச சேவைக்கு அழைக்க உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சில வரையறைகளுக்கு உட்பட்டு அவர்களை சேவைக்கு அழைக்க உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த அழைப்பானது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் தேவைக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நிறுவனங்களை நடத்திச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்

இந்த விடயம் தொடர்பான சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இதனிடையே அமைச்சுக்கள் மட்டத்தில் நடத்தப்படும் மக்கள் தினத்தை வரைறைகளுடன் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவைக்கு அமைவான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிய பின்னர், அமைச்சின் அதிகாரிகளை சந்திக்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: