கரையோர பாதுகாப்பை வலுப்படுத்த இரண்டு படகுகளை ஜப்பான் வழங்கும்!

Friday, May 13th, 2016
நாட்டின் கரையோர பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு பெற்றோல் படகுகளை வழங்கவுள்ளது.
குறித்த படகுகள், தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடக்கூடிய ஆற்றலைக்கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2.4 பில்லியன் ரூபா பெறுமதியான இந்த அன்பளிப்பை, ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கவுள்ளது.
இதன்மூலம் கடலில் அத்துமீறல் மற்றும் கடலில் இடம்பெறும் குற்றங்கள் என்பவற்றை கட்டுப்படுத்தமுடியும் என்று இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts: