கருப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் நீக்கம் – நாளைமுதல் நாட்டுள்குள் பிரவேசிக்க அனுமதியளித்தது ஜப்பான்!

Sunday, September 19th, 2021

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இலங்கை உள்ளிட்ட கருப்பு பட்டியலில் உள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை திங்கட்கிழமைமுதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவலின் அதிகரிப்பினால் ஜப்பானின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சில நாடுகளுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: