கருத்தடை விவகாரம்: முறைப்பாடு செய்யும் தாய்மார்களுக்கு விசேட மருத்துவ சோதனை!

Thursday, May 30th, 2019

சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் கருத்தடை தொடர்பில் முறைப்பாடு செய்யும் தாய்மார்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் மாத்திரம் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, குறித்த மருத்துவ பரிசோதனைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் லால் பனாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்காக விசேட வைத்தியர் குழாத்தினை நியமிப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிகாப்தீன் மொஹமட் ஷாபி மீது 200 க்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, குருநாகல் வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையிலும் 13 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று குருநாகலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts:


அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1000 ரூபா பொதி மே 2 முதல் வழங்க ஏற்பாடு - வர்த்தக அமைச்சர் பந்த...
அனைத்து அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ...
மேலும் ஒருதொகுதி பைசர் தடுப்பூசிகள் அதிகாலை நாட்டை வந்தடைந்தன - 56 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளும் ...