கருத்தடை சிகிச்சை விவகாரம் – குற்றப்புலனாய்வு துறையினர் வெளியிட்ட செய்தி!

Friday, June 28th, 2019

குருநாகல் வைத்தியர் ஷாபியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்று குற்றப்புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

வைத்தியர் ஷாபி, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்ட நிலையில் சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சைகளை மேற்கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் இதுவரை அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வு துறையினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.

தமது பணிக்காலத்தின்போது ஷாபி 3479 சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இதில் 860 முஸ்லிம் பெண்களும், 33 தமிழ் பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பெண்களில் 13 பேர் நிபுணர்கள் குழுவினால் பரிசோதிக்கப்பட்டனர்.

இதன்போது மேலதிக பரிசோதனைகளுக்கு இரண்டு பேரே தகுதியுள்ளவர்கள். ஏனைய 11 பேரின் குற்றச்சாட்டும் பொய்யானவை என்று நிபுணர் குழு அறிவித்துள்ளது.

Related posts: