கலைஞர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க மேலும் 4 மருத்துவர்கள் – தமிழகத்தில் பரபரப்பு!
Friday, July 27th, 2018வயது மூப்பின் காரணமாக உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க மேலும் 4 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்ப மருத்துவர் கோபாலும் வருகைத் தந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கலைஞர் கருணாநிதிக்கு காய்ச்சல் வந்துள்ளது. காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் குழு கண்காணித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை பார்க்க, யாரும், நேரில் வர வேண்டாம் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோபாலபுரம் வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு மேலும் 4 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், கூடுதலாக 4 மருத்துவர்கள் வருகை தந்துள்ளனர். குடும்ப மருத்துவர் கோபாலும் வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், கருணாநிதியின் வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். திமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களும் வரத் தொடங்கியுள்ளனர். கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் கேட்டறி தொண்டர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதியை பார்ப்பதற்காக மு.க. அழகிரி மதுரையில் இருந்து சென்னை வருகைதருகின்றாரர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
|
|