கரிம உர இறக்குமதிக்கு அனுமதி – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

இதுவரை நெல் சாகுபடிக்கு மாத்திரம் கரிம உரம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுதல், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் பிற பயிர்களுக்கு கரிம உரங்களை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு அரச உர நிறுவனங்களுக்கு குறித்த உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒக்டோபர் மாதத்திற்குள் அனைத்துப் பயிர்களுக்கான உரத்தையும் தட்டுப்பாடின்றி சந்தையில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக தனியார்துறைக்கு உரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக நெல் சாகுபடிக்கு தேவையான கரிம உரங்கள் உள்நாட்டிளேயே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் போதிய அளவு கரிம நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் கூறினார்.
அத்துடன் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 300 கிலோ நைட்ரஜன் மற்றும் 45 கிலோ பொட்டாசியம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|