கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களது தகவல்களை தருமாறு பணிப்பாளர் கேதீஸ்வரன் வசர வேண்டுகோள்!

Saturday, November 7th, 2020

யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தமது விபரங்களை அறியத்தருமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கரவெட்டியிலுள்ள மனோகரா அல்வாயைச் சேர்ந்த ஒரே குடும்பத்திலுள்ள மூவருக்கு கொரோனா தொற்று கடந்த 05ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கரவெட்டி மற்றும் அண்மைய பிரதேசங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு நபர்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர்.

இதனால் இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிற்குரிய 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறியத்தரவும். இவ்விபரங்கள் தொடர்பான இரகசியத்தன்மை இறுக்கமாகப் பேணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இலங்கையில் நேற்றையதினமும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரத்து பிசிஆர...
நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...
நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது ...