கரவெட்டி கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு!

Wednesday, May 23rd, 2018

கரவெட்டி கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று  (23) காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால் கேபிள் ரீவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் நகரில் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகனாந்தன் (வயது- 50) சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts: