கரணவாய் பகுதியில் மினி சூறாவளி – 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!

கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவின் கரணவாய் பகுதியில் நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 12 மணி வரையான நிலவரம் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரணவாய் பகுதியின் ஜே348, ஜே 350 பிரிவுகளிலேயே இந்த சேத விவரங்கள் பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியானது - அலுவலகங்களில் கூட்டங்கள் மற்றும் த...
மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் மாற்றம் - புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக தலைவர...
|
|