கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று – அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் எதிர்த்து வாக்களிக்க தீர்மானம்!

Tuesday, July 20th, 2021

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள அவநம்பிக்கைப் பிரேரணை இன்று மாலை வாக்கெடுப்புக்கு வருகிறது.

இதற்கான வாக்கெடுப்பு மாலை 5.30 க்கு இடம்பெறும் என்று நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நேற்று சபையில் உரையாற்றிய அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அறிவித்துள்ளார். அதேநேரம் ஜேவிபியும் இதனை ஆதரிக்கவுள்ளது.

இதேவேளை, இந்த அவநம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா? என்பது தொடர்பாகச் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்களும், தடுப்புக்காவலில் உள்ள றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 3 உறுப்பினர்களும் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என செய்திகள் கூறுகின்றன.

இதுதொடர்பாக இன்று அவர்களுக்கு இடையில் பிரத்தியேக கலந்துரையாடல்கள் இடம்பெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: