“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன்மானமா – வலி. வடக்கு சபையில் கடும் வாய்ச்சண்டை!

Thursday, May 16th, 2019

கம்பரலிய திட்டம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு போட்ட பிச்சையா? அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மத்தியில் ஆட்சி அமைக்க முண்டு கொடுத்ததற்கு கொடுக்கப்பட்ட சன்மானமா? என்பது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் கடும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அபிவிருத்திகள் தொடர்பில் சபை உறுப்பினர்களிடையே பல்வேறுபட்ட அவிப்பிராயங்கள்  மற்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் வித்தகபுரம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட்டார உறுப்பினரால் முன்மொழியப்பட்ட வீதியை புறக்கணித்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரது முன்மொழிவை தவிசாளர் நடைமுறைப்படுத்தியிருந்தமையால் அது தொடர்பில் குறித்த உறுப்பினர் சபையில் காரணத்தை கேட்டபோது பெரும் வாதப்பிரதிவாதம் எழுந்துள்ளது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்மைப்பினரை பார்த்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இந்த திட்டம் எமது அரசாங்கத்தால் உங்களுக்கு வழங்கப்பட்ட பிச்சை என்று தெரிவித்துள்ளார். இதனால் சபையில் கடும் சிரிப்பொலி எழுந்தது. இதனால் அதிர்ச்சியுற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பிர் இது நீங்கள் போட்ட பிச்சை அல்ல நாம் உங்கள் அரசைக் காப்பாற்ற நீங்கள் எமக்கு தந்த சன்மானம். அதை நாம் எமது விருப்பப்படியே செய்வோம் என பதிலளித்துள்ளார். இதனால் சபையில் சிறிது நேரம் குழப்ப நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: