கனேடிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வர்த்தக பிரதிநிதிகள் குழு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது.
இலங்கையில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தூதுக்குழுவும் அமைச்சரும் விரிவாக கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் பிரேமஜயந்த, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்களின் போது வழங்கிய ஆதரவிற்கு கனடாவுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், அமைச்சரின் சமீபத்திய கனடா விஜயத்தின் போது நடைபெற்ற கலந்துரையாடலின் படி, உயர்கல்வியை தொடரும் இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கனடா எடுத்த நடவடிக்கைகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
கனேடிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் கல்வி அமைச்சரிடம் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|