கனியவள கூட்டுத்தாபனம் 5,000 மெட்ரிக்டன் உராய்வு எண்ணெய்யை மின்சார சபைக்கு வழங்குகிறது!

கனியவள கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபைக்கு 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த உராய்வு எண்ணெய் வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனியவள கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு, உராய்வு எண்ணெய் வழங்கப்படாமை காரணமாக, நாட்டின் பல பாகங்களில் மின்சார விநியோகத்தடையை ஏற்படுத்த மின்சார சபை நேற்றையதினம் நடவடிக்கை எடுத்திருந்தது.
நேற்று மாலை 5.30முதல் இரவு 9.30 வரையிலான காலப்பகுதியில், ஒரு மணிநேரம் இவ்வாறு மின்சார விநியோகம் தடைப்பட்டது.
அதேநேரம், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மற்றும் குக்குலேகங்க செயல் திட்டத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|