கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் பெறும் நடைமுறை மறு அறிவித்தல்வரை நீக்கம் – புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அறிவிப்பு!

மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் பெறும் நடைமுறை மறு அறிவித்தல்வரை நீக்கப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வால்போல தெரிவித்துள்ளார்.
ஜூன் முதலாம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல்வரை மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் தேவையற்றது என்று சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, தகவல் அளித்ததாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வால்போல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுதொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அனுர வால்போல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தெரிவு குழுவின் காலம் நீடிப்பு!
இம் மாதம் 23 ஆம் திகதி தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமன நேர்முக பரீட்சை !
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் - யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர...
|
|