கனமழையினால் 10188 குடும்பங்கள் பாதிப்பு – யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட தகவல்!

Thursday, November 11th, 2021

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் யாழ்.மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்தி 188 குடும்பங்களை சேர்ந்த சுமார் 33 ஆயிரத்தி 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் – சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 110 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. தற்போது 6 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு

96 குடும்பங்களை சேர்ந்த 308 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளமை குறியிடத்தக்கது.

Related posts: