கனடா விசா நடைமுறையில் மாற்றமில்லை!

Friday, March 17th, 2017

வீசா இன்றி இலங்கை பிரஜைகள் கனடாவிற்கு செல்ல முடியும் என வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என  இலங்கைக்கான  கனேடிய உயர்ஸ்தானிகராலயம்  தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

வீசா நடைமுறையில் வழமையான நடைமுறைகளே பின்பற்றப்படுவதாக அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக கனடா செல்லும் இலங்கையர்களுக்கு  வீசா அனுமதி தேவையில்லை என சில சமூக வலையமைப்புக்கள் மூலம் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து கனடா செல்ல விரும்புபவர்கள் http://www.cic.gc.ca/english/visit/index.asp என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


சிரிய சமாதான முனைப்புக்களுக்கு உதவி வழங்கத் தயார் – ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி!
ரயில் விபத்து : உத்தரப்பிரதேசத்தில் 21 பேர் பலி!
போக்குவரத்து வசதியின்மையால் மாணவர்கள் பெரும் அவதி - ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலர்!
மனுக்கள் அனைத்தையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் அறிவிப்பு!
பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்!